Swiss News In Tamil

சுவிஸ் கிராமம் ஒன்று எடுத்த தீர்மானம் : கட்டணம் செலுததினால்தான் அனுமதி.!

சுவிஸ் கிராமம் ஒன்று எடுத்த தீர்மானம் : கட்டணம் செலுததினால்தான் அனுமதி.! Bernese Oberland ல் உள்ள அழகிய கிராமமான Lauterbrunnen, இத்தாலியின் வெனிஸின் வழியைப் பின்பற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது.

அதாவது அங்கு வரும் பார்வையாளர்களுக்கு தினசரி கட்டணத்தைக் வசூலிக்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்கள் உலகப் புகழ்பெற்ற லாட்டர்ப்ரூனெனின் அழகை ரசிக்க பயணம் செய்கிறார்கள்.

சுவிஸ் கிராமம்

எனவே அதிகரிக்கு சுற்றுலாப்பயணிகளால் கழிவுகள் குப்பைகள் பல தேங்கி கிடப்பதால், வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் வாழ்பவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

தற்போது குறித்த கிராமத்திற்கு வருகை தரும் அளவுக்கு அதிகமான பயணிகளை கட்டுப்படுத்தவும் நகரத்தின் நிதித்தன்மையை உயர்த்தவும் புதிய வழிகளை ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த நகரத்திற்கு காரில் வருபவர்களிடம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என அக்குழு தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களும் ஹோட்டலில் தங்கியிருப்பவர்களும் பணம் செலுத்த தேவையில்லை எனவும் சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கான விலை 5 முதல் 10 பிராங்குகள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button