Swiss News In Tamil

புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய சுவிஸ் விமானம்: பின்னணி

அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்ட சுவிஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பிய ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய சுவிஸ் விமானம்

ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியிலிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நோக்கிப் புறப்பட்ட சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பியது.

பயணி ஒருவர் திடீரென முரட்டுத்தனமாக நடந்துகொண்டதுடன், பணியாளர்களையும் தாக்கத் துவங்கியதால், விமானி விமானத்தை புறப்பட்ட இடத்துக்கே திருப்பிக் கொண்டு சென்றார்.

விமான நிலையத்தில்

விமான நிலையத்தில் தயாராக காத்திருந்த பொலிசார் அந்த பயணியைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.

அந்தப் பயணி தாக்கியதில், விமானப் பணியாளர் ஒருவர் காயமடைந்ததால், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் வேறு விமானங்களில் ஏற்றப்பட்டு சூரிச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

Related Articles

Back to top button