Swiss News In Tamil

வின்டர்தூரில் கார் திருடிவிட்டு போலீசாருக்கு ஓட்டம் காட்டிய சிறுவன் கைது

வின்டர்தூரில் கார் திருடிவிட்டு போலீசாருக்கு ஓட்டம் காட்டிய சிறுவன் கைது சூரிச் கன்டோன் வின்டர்தூரில் கார் ஒன்றினை திருடிச்சென்ற இளைஞனை போலீசார் விரட்டிப்பிடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை காலை வின்டர்தூரில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்இ செவ்வாய்கிழமை இரவு நிலக்கீழ் வாகன தரிப்பிடம் ஒன்றில் வைத்து குறித்த கார் திருடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் நேற்று புதன்கிழமை காலை போலீசார் தேட ஆரம்பித்துள்ளார்கள். நேற்று காலை 11 மணியளவில் வின்டர்த்தூர் ஜின்சிகர்பெர்க் திராசவில் குறித்த கார் பயணிப்பதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவதானித்துள்ளனர்.

உடனடியாக காரை பின்தொடர்ந்து சென்று நிறுத்த முன்படும் போதுஇ திருடிய காரை ஓட்டிச்சென்றவர் மிக வேகமாக காரை ஓட்டிச்சென்றுள்ளார். பின்னர் ஓரிடத்தில் மோதுண்டு காயங்கள் இன்றி தப்பியோடியுள்ளார்.

wppi image polizei news240306 winterthur vukoe.1709803559491 994x550 1

இறுதியாக் குறித்த இளைஞனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் வெறும் 15 வயதுடைய சிரியா நாட்டைச்சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

விபத்து காரணமாக திருடப்பட்ட கார் மற்றும் சேதமடைந்த கட்டிடம் உட்பட பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வின்டர்த்தூர் நகர காவல்துறை மற்றும் வின்டர்த்தூர் இளைஞர் வழக்கறிஞரின் ஒத்துழைப்புடன் சூரிச் கன்டோனல் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

News & Image : Kantonspolizei Zürich

Related Articles

Back to top button