Swiss News In Tamil

ஆர்காவ் கன்டோனில் பேரூந்துடன் மோதிய கார் – ஓட்டுனர் உரிமம் பறிமுதல்

ஆர்காவ் கன்டோனில் பயணிகள் பேரூந்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் ஜனவரி 10, 2024 அன்று மதியம், Spreitenbach இல் Industriestrasse இல் உள்ள ரவுண்டானாவில் RVBW பேருந்து ஒன்று சென்றது.

ஆர்காவ் கன்டோனில்

பேருந்து ஏறக்குறைய முழுவதுமாக ரவுண்டானாவில் வந்தபோது, ​​சாம்பல் நிற AUDI ஒன்று ரவுண்டானாவில் வந்து பேருந்தின் பக்கவாட்டில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், பயணிகள் இன்றி பேருந்து சென்று கொண்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சூரிச்சில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது

இரண்டு வாகனங்களுக்கும் பல ஆயிரம் பிராங்குகள் மதிப்பிலான பொருள் சேதம் ஏற்பட்டது.

விபத்தினை ஏற்படுத்திய 83 வயதான டிரைவரால் விபத்து ஏன் ஏற்பட்டது என்பதை விளக்க முடியவில்லை.

கன்டோனல் போலீசார் தமது விசாரணைகளை தொடர்ந்து 83 வயது ஓட்டுனரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டது.

ஆதாரம்: ஆர்காவ் கன்டோனல் போலீஸ்
பட ஆதாரம்: ஆர்காவ் கன்டோனல் போலீஸ்

Related Articles

Back to top button