Local Swiss News

கொக்கைன் பயன்பாட்டில் ஜெனீவா அதிர்ச்சி முதலிடம்! ஐரோப்பாவின் Top 10 நகரங்களில் சுவிஸ் நகரங்கள்!

கொக்கைன் பயன்பாட்டில் ஜெனீவா அதிர்ச்சி முதலிடம்! ஐரோப்பாவின் Top 10 நகரங்களில் சுவிஸ் நகரங்கள்!

கொக்கைன் பயன்பாடு சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அடிஷன் சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் கொக்கைன் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. கழிவுநீர் பகுப்பாய்வு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இந்தப் போக்கை உறுதிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக ஜெனீவா மற்றும் சூரிச் நகரங்கள் தற்போது ஐரோப்பாவில் கொக்கைன் பயன்பாடு அதிகமாக உள்ள பத்து நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

a09 4

நிபுணர்களின் கூற்றுப்படி, கொக்கைன் முன்பை விட மிகவும் எளிதாகக் கிடைக்கிறது. அதேவேளை அதன் தூய்மைத் தன்மையும் அதிகரித்துள்ளதுடன், விலையும் பெரிதாக உயராததால் பயன்பாடு வேகமாகப் பரவி வருகிறது.

இதன் விளைவாக, கொக்கைன் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், போதைப்பழக்க சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மேலும், கொக்கைன் பயன்பாடு தற்போது இரவு நேர கேளிக்கைகள் மற்றும் பார்ட்டி கலாச்சாரத்தைத் தாண்டி, பணியிடங்களுக்கும் பரவி வருவதாக அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் போதைப்பொருள் பயன்பாட்டின் வளர்ச்சி குறித்து இந்த புதிய ஆய்வு சமூக மற்றும் சுகாதார வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button