Swiss News In Tamil

ஜெனீவா ஐ.நா தலைமையகம் நிதியின்மை காரணமாக மூடல்

ஜெனீவா ஐ.நா தலைமையகம் நிதியின்மை காரணமாக மூடல் ஜெனீவாவில் உள்ள ஐ.நா கட்டிடம் நிதிநிலமைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் ஐ.நா.வின் வரவு-செலவுத் திட்டத்தில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் ஐரோப்பிய தலைமையகமான ஜெனீவாவில் உள்ள Palais des Nations ஜனவரி 12 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது .

மின்சாரம் மற்றும் பராமரிப்பு செலவுகளை மிச்சப்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 1YpG65u723uhB5brUJt3ZQ

ஐ.நா., அமெரிக்கா உட்பட ஐம்பது நாடுகள் தங்கள் நிதி பங்களிப்புக் கொடுப்பனவுகளை நிறைவேற்றத் தவறியதால், பணப்புழக்கச் சிக்கல்களை எதிர்கொள்கிறது.

ஆனால் இந்த முன்னோடியில்லாத செயற்பாட்டால் மட்டும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை குறைத்துவிடவோ முடியாது எனப்படுகிறது.

அங்குள்ள ஊழியர்கள் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்இ எனினும் பார்வையாளர்கள் மற்றும் பிற செயல்பாடுகளுக்கு கட்டிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.