சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிருடனான காலநிலை
சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிருடனான காலநிலை – இன்று திங்கட்கிழமை சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது.
மலைப்பாங்கான பிரதேசங்களில் பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளதுடன் சாலைகளும் போக்குவரத்திற்கு அபாயகரமாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வீதிகள் பல, வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால் சாரதிகள் பயணிக்கும் போது அவதானத்துடன் பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் மிகவும் குளிர்ச்சியான காலநிலை நிலவும் என எதிர்பாக்கப்படுகிறது.

குறிப்பாக ஜெனீவா போன்ற மாகாணங்களில் வெப்பநிலை, மைனஸ் டிகிரியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைனஸ் ஐந்திலிருந்து எட்டுவரை செல்லலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்றும் பல்வேறு மாகாணங்களில் வெப்பநிலை மைனஸ் டிகரி வரை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






