Swiss News In Tamil

சுவிசில் ஈழ தமிழ் சிறுமி விவகாரம் – தாய் பரபரப்பு வாக்குமூலம்

சுவிசில் ஈழ தமிழ் சிறுமி விவகாரம் – தாய் பரபரப்பு வாக்குமூலம் சுவிட்சர்லாந்தில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் செய்தி, ஒரு தாய் தனது குழந்தையை கண்டித்தும், தகாத வார்த்தைப்பிரயோகங்ளால் திட்டியும் வெளியான காணொளி சம்மந்தமான செய்தி.

https://youtu.be/3cyus6lJKvc

இது தொடர்பாக குறித்த தாய் தனது பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்டு அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்ததோடு, தான் செய்தது தவறு என்பதையும் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

https://youtu.be/53VXvUPsHSU

இது மாத்திரம் இன்றி, பாதிக்கப்பட்டதாக கருதப்படும் சிறுமி, காரசாரமான முறையில் ஓரிரு காணொளிகளை வெளியிட்டு, தாய் எங்களை கொடுமைப்படுத்தவில்லை எனவும், இது தொடர்பான யாரும் செய்தி வெளியிடவோ, எங்களது குடும்ப பிரச்சினையில் தலையிடவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

https://youtu.be/YtW_HwUzLhM

மேலும் தாய் மீண்டும் ஒரு காணொளியினை நேற்றைய தினம் வெளியிட்டிருந்தார். மன்னிப்பு கேட்டதை கூட பலர் விமர்சிப்பதாகவும், நான் நடிக்கவோ, அல்லது சிம்பாத்தி கிரியேட் பண்ணவோ இல்லை எனவும் கூறி காணொளி வெளியிட்டுள்ளார்.

என்னைப்பற்றி அவதூறாக செய்தி வெளியிடுபவர்கள் முதலில் நான் யார் என்பதை புரிந்துகொண்டும் தெரிந்துகொண்டும் செய்தி வெளியிடுங்கள் என உருக்கமாக பேசி புதிய காணொளியை வெளியிட்டுள்ளார். இதோ எமது வலைக்காட்சி உறவுகளுக்காக அந்த காணொளி.

https://youtu.be/PXytuc280lk

Related Articles

Back to top button