Swiss News In Tamil

விமானப் பயணிகள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் சுவிஸ் அரசு

சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் விமானப் பயணிகள் தகவல்களை பரிமாறிக் கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொலிஸ் தகவல் பரிமாற்றத்திற்கு இந்த இணக்கப்பாடு உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

Swiss adds more cabin cargo 1

ஐரோப்பிய ஒன்றிய அனைத்து நாடுகள் உள்ளிட்ட 70 நாடுகள் இவ்வாறு விமானப் பயணிகளின் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

திட்டமிட்ட குற்றச் செயல்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை தடுத்து நிறுத்துவதற்கு இவ்வாறு பணிகளின் தகவல்கள் பரிமாற்றம் உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விமானப் பயணிகளின் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் யோசனைக்கு கான்டன் நிர்வாகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (source:- tamilinfo)

Related Articles

Back to top button