சூரிச் நீதிமன்றில் குண்டு அச்சுறுத்தல் – மக்கள் வெளியேற்றம்
சூரிச் நீதிமன்றில் குண்டு அச்சுறுத்தல் – மக்கள் வெளியேற்றம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நீதிமன்றில் குண்டு அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இனந்தெரியாத நபர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
சில ஜெர்மன் மொழி ஊடகங்களுக்கு இந்த அச்சுறுத்தல் குறித்த மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த அச்சுறுத்தலை தொடர்ந்து நீதிமன்ற கட்டடத்தில் இருந்து அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
போலீசார் குறித்த பகுதியை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குண்டு வைத்து நீதிமன்ற கட்டடத்தை தகர்க்க போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
வார இறுதியில் குண்டு வைத்ததாகவும் அதனை வெடிக்கச் செய்யப் போவதாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த அச்சுறுத்தல் குறித்து சூரிச் கான்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





