Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் நாய்க்குட்டிக்கு பீர் கொடுத்த தமிழன் – வைரல் வீடியோ

சுவிட்சர்லாந்தில் நாய்க்குட்டிக்கு பீர் கொடுத்த தமிழன் – வைரல் வீடியோ யேர்மனி நாட்டில் வசித்து வருபவர் என கருதப்படும் வரும் டிக்டாக் பிரபலம் பசில் என்பவர் சுவிட்சர்லாந்தில் வெளியிட்ட காணொளி ஒன்று தற்போது இணையத்தளத்தில் பிரபல்யமாகிவருகின்றது.

டிக்டாக்கில் நகச்சுவையாக பல விடயங்களை வெளியப்படையாக பேசி வீடியோ வெளியிட்டு வரும் பசில் என்ற புலம்பெயர் தமிழர் ஒருவர் அண்மையில் சுவிட்சர்லாந்துக்கு வந்திருந்தார்.

bazil TikTok

அப்போது சுவிட்சர்லாந்தின் பல இடங்களுக்கும் சென்று காணொளி வெளியிட்டும் வந்தார். அந்த காணொளியில் பல டிக்டாக் கில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சுவிசில் சப்கவுசன் Rheinfall நீர்வீழ்ச்சி வீடியோவை குறிப்பிடலாம். மேலும் சுவிட்சர்லாந்தின் பிரபல அங்காடியான DENNER (டென்னர்) என்று அழைக்கப்படும் கடைக்கு முன் நின்று வெளியிட்ட காணொளியும் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து ரெண்டிங் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக DENNER என்ற அந்த கடையின் பெயரை DANGER என நகச்சுவைக்காக குறிப்பிட்டு காணொளி வெளியிட்டது மட்டுமல்லாது அந்த கடைத்தொகுதிக்கு முன்னர் கட்டிவைக்கப்பட்டிருந்த ஒரு நாய்க்குட்டிக்கு பீர் கொடுக்க முயற்சித்தும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

bazil TikTok

இது நகச்சுவைக்காக செய்யப்பட்டிருந்தாலும் சுவிட்சர்லாந்தில் இவ்வாறான செயற்பாடுகள் விருப்பத்தாகாத செயற்பாடுகளாக இங்குள்ளவர்களால் பார்க்கப்பட்டு வருகின்றமை முக்கிய விடயமாகும்.

Basil Usha

நாயின் உரிமையாளர் இந்த சம்பவத்தை நேரில் கண்டிருந்தால் நிச்சயம் எச்சரித்து அல்லது போலீசாருக்கு தகவல் கொடுத்திருப்பார் எனவும் சுவிட்சர்லாந்தில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

பலர் இவரது காணொளிகள் நகச்சுவைக்காகவே என்பதை புரிந்து கொண்டாலும் ஒரு சில செயற்பாடுகளை விமர்சிக்கவும் தவறவில்லை. இது மாத்திரம் இன்றி குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் தமிழரின் உடையான சாரம் அணிந்து கொண்டு யேர்மனியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று பொருட்கள் கொள்வனவு செய்திருந்தார்.

Basil Usha

அதனை தொடர்ந்து அங்கு பை வாங்க முடியாமல் தனது சாரத்தை அங்கேய கழட்டி பொருட்களை அதில் போட்டு மூட்டை கட்டி கொண்டு வருவதைப்போன்ற ஒரு காணொளியும் இணையத்தில் வைரல் ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளியினை பல ஊடகங்களும் இந்திய தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Back to top button