Swiss News In Tamil

சுவிஸில் இளைஞர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்

சுவிஸில் இளைஞர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்

சுவிட்சர்லாந்தில் பொலிஸாருக்கும் இளைஞா்களுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தின் லௌசான் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞர்கள் திரண்டு பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் போலீசாரை நோக்கி பட்டாசுகள் வீசப்பட்டதுடன், குப்பை தொட்டிகள் தீவைக்கப்பட்டதாகவும் ஒரு பேருந்தும் சேதமடைந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேலாஸ் பகுதியில் இரவு 9.30 மணியளவில் சுமார் 100 இளைஞர்கள் கூடினர். முகமூடி அணிந்த சிலர் போலீசாரை தாக்கினர் எனவும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“பல மணி நேர வன்முறைக்குப் பின், இரவு 12 மணிக்குப் பிறகு அமைதி நிலவியது” என்று வோட் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்களில் தெருவில் கவிழ்க்கப்பட்ட குப்பை தொட்டிகள், எரிந்த குப்பைகள், சேதமடைந்த பொது போக்குவரத்து பேருந்து ஆகியவை காணப்பட்டன.

Vaud கன்டோனில்

 

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 17 வயது இளைஞர் ஒருவர் போலீசாரிடமிருந்து தப்பிச் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது இந்த கலவரத்துக்குக் காரணமாக இருக்கலாம். அந்த இளைஞர் திருடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஸ்கூட்டரில் சென்றபோது, போலீசார் தூரத்தில் பின்தொடர்ந்தனர். சாலையில் வேகக் கட்டுப்பாட்டை மீறியபோது அவர் வாகன கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி இறந்தார்.

Guerriglia urbana dopo la morte del 17enne Ticinonline 08 26 2025 12 33 AM f morte 17enne guerriglia quartiere losanna 1knzs

ஜூன் மாதத்திலும் இதேபோன்ற சம்பவம் லௌசானில் நடந்தது. அப்போது 14 வயது சிறுவன் போலீஸ் சோதனையிலிருந்து தப்பிச் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளாகி தீவிரமாக காயமடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். வோட் மாநில சட்டமன்றம் இந்த விபத்து தொடர்பாக குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

@Kapo VD

Related Articles

Back to top button