Swiss News In Tamil

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியான Seine et Marne இல் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் பேருந்து ஒன்றில் தாய் ஒருவர் ஆபத்தான நிலையில் குழந்தை பெற்றுள்ளார்.

கடந்த வாரம் Meaux) பகுதியில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்திற்குள் பெண் ஒருவர் குழந்தை பிரசவித்ததையே இந்த குழப்பம் மற்றும் தாமதம் ஏற்பட காரணம் என கூறப்படுகின்றது.

காலை 10 மணிக்குப் பிறகு, பேருந்தில் இருந்து பயணிகள் திடீரென இறங்கினார்கள். சிலர் குழப்பமடைந்தனர். எனினும் இறுதியிலேயே அது ஒரு ஆச்சரிய குழந்தை பிரசவம் என பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரான்ஸில் தமிழர்கள்
பிரான்ஸில் தமிழர்கள்

பெண் ஒருவர் தனது கணவருடன் முதலாவது குழந்தை பிரசவிப்பதற்காக பேருந்தில் மருத்தவமனைக்கு சென்றுக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாரதியிடம் கணவர் திடீரென வந்து மனைவிக்கு வயிற்று வலி என கூறியுள்ளார். குழப்பமடைந்த சாரதி அந்த பெண்ணை பார்க்கும் போதே அவர் கர்ப்பிணி எனவும் அவர் குழந்தை பிரசவிக்கவுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

சுவிஸ் நாட்டில் பிரபாகரன்

திடீரென அந்த பெண் கத்தி கூச்சலிட்டவுடன் பேருந்தை உடனடியாக நிறுத்துமாறு இந்த பெண்ணின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய, பேருந்தை நிறுத்தியவுடன் கணவர் அவசர சேவைகளுக்கும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கும் சென்று உதவி பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்துள்ளார்.

அதற்குள் பேருந்திற்குள்ளேயே குழந்தை பிறந்துள்ளது. 5 பெண்கள் இணைந்து குழந்தையை பிரசவித்துள்ளனர். அதன் பின்னர் குழந்தையையும் தாயையும் சூடான ஒரு போர்வையை கொண்டு போர்த்தி காப்பாற்றியுள்ளனர்.

WhatsApp Image 2023 01 23 at 21.50.45

குழந்தை பிறக்கும் வகையில் ஏனைய பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு இறங்கி குழந்தை பிரசவிக்க இடம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் பின்னர் குழந்தையும் தாயையும் மருத்துவமனையில் அனுமதித்தவிட்டு, இன்று பேருந்தில் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் என பேருந்து நிறுவனம் டுவிட்டரில் அறித்துள்ளது.

Related Articles

Back to top button