Swiss News In Tamil

ஏரிகள் மற்றும் நதிகளில் ஆபத்து.? “சயனோபாக்டீரியா” குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை

ஏரிகள் மற்றும் நதிகளில் ஆபத்து.? “சயனோபாக்டீரியா” குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை

வெயிலுடன் வரும் ஆபத்து – ஏரிகள் மற்றும் நதிகளில் “சயனோபாக்டீரியா” குறித்து வோ அதிகாரிகள் எச்சரிக்கை

இந்த வார இறுதியில் சுவிட்சர்லாந்தில் வெயிலான வானிலையும் 30 டிகிரிக்கு அண்மையான வெப்பநிலையும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், ஏரிகள் மற்றும் நதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பக்கூடும் என கணிக்கப்படுகிறது.

ஆனால், Vaud கன்டோன் அதிகாரிகள் நீர்நிலைகளில் வேகமாக பரவக்கூடிய “சயனோபாக்டீரியா” (cyanobacteria) குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சூடான மற்றும் அசையாத நீரில் இந்த நுண்ணுயிரிகள் வேகமாக பெருகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மற்றும் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக சிறுவர்கள் அதிக ஆபத்துக்குள்ளாகலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

n8a 1

மேலும், நீர் மேகமூட்டமாக, நிறம் மாறியதாக அல்லது மேற்பரப்பில் பசை போன்ற அடுக்கு காணப்பட்டால் அந்த நீரில் இறங்கவே கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சயனோபாக்டீரியா பாதித்த நீருடன் தொடர்பு கொண்டதால் நாய்கள் கடுமையாக நோயுற்றதுடன் சில சம்பவங்களில் உயிரிழந்ததுமுண்டு என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, நீர் சந்தேகத்திற்கிடமாக தோன்றினால் அதனை தொடவோ, அதில் நீந்தவோ கூடாது என்றும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெயில் காலத்தில் சுவிட்சர்லாந்தின் ஏரிகள் மற்றும் நதிகள் பெரும் ஈர்ப்பாக இருக்கும் நிலையில், இந்த சுகாதார எச்சரிக்கை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.  © WRS

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button