Swiss News In Tamil

வின்டத்தூர் (Winterthur) பகுதியில் திடீரென தீப்பற்றிய வேன் – தீயணைப்பு படை தீவிரம்.!

வின்டத்தூர் Winterthur – Schützenstrasse பகுதியில் திடீரென தீப்பற்றிய வேன் – தீயணைப்பு படை தீவிரம்.! வின்டத்தூர் Schützenstrasse இல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு முன்னதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வின்டத்தூர் போலீசார் அறிவித்துள்ளார்கள். குறித்த வேனின் முன்பகுதி தீப்பற்றியமையினால் பரபரப்பான நிலமை ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

வின்டத்தூர்,Winterthur,Schützenstrasse ,தீப்பற்றிய வேன்
வின்டத்தூர் (Winterthur) பகுதியில் திடீரென தீப்பற்றிய வேன் – தீயணைப்பு படை தீவிரம்.!

வாகனத்தின் முன் பகுதி முன்றாக தீப்பிடித்து சேதம் அடைந்துள்ளதூடு அருகில் உள்ள கட்டிடத்துக்கு தீ பற்றிக்கொள்ளாமல் தீயணைப்பு படையினர் செயலாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறித்த வானத்திற்கு பெருமளவு சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.

வின்டத்தூர் (Winterthur) பகுதியில் திடீரென தீப்பற்றிய வேன் - தீயணைப்பு படை தீவிரம்.!
வின்டத்தூர் (Winterthur) பகுதியில் திடீரென தீப்பற்றிய வேன் – தீயணைப்பு படை தீவிரம்.!

இச்சம்பவத்தினால் Schützenstrasse வீதி 2 மணித்தியானலங்களாக மூடப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின் போது இழப்பு சுமார் 60000 பிராங்கள் வரையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button