Local Swiss News

ஃப்ரிபூர்க் ஒலிம்பிக் மீண்டும் சுவிஸ் கூடைப்பந்து சாம்பியன்

ஃப்ரிபூர்க் ஒலிம்பிக் மீண்டும் சுவிஸ் கூடைப்பந்து சாம்பியன்

ஃப்ரிபூர்க் ஒலிம்பிக் மீண்டும் சுவிஸ் கூடைப்பந்து சாம்பியன்

Fribourg Olympic அணி மீண்டும் சுவிட்சர்லாந்தின் கூடைப்பந்து சாம்பியனாக முடிசூடியுள்ளது.

நடைபெற்ற இறுதிப்போட்டித் தொடரின் நான்காவது ஆட்டத்தில், Geneva Lions அணியை 86–66 என்ற கணக்கில் தோற்கடித்த ஃப்ரிபூர்க் ஒலிம்பிக், தனது 23ஆவது தேசிய பட்டத்தை கைப்பற்றியது.

முக்கிய இரு வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய ஜெனீவா அணி, முதல் பாதி வரை போட்டியை சமநிலையுடன் முன்னெடுத்திருந்தது. ஆனால் மூன்றாவது கால்பகுதியில் ஆட்டத்தின் கட்டுப்பாட்டை ஃப்ரிபூர்க் ஒலிம்பிக் முழுமையாக கைப்பற்றியதுடன், பின்னர் வெற்றியை உறுதிப்படுத்தியது.

கடந்த ஆண்டு இதே ஜெனீவா அணியிடம் இறுதியில் தோல்வியடைந்திருந்த ஃப்ரிபூர்க், இந்த வெற்றியின் மூலம் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.

ஃப்ரிபூர்க் ஒலிம்பிக் மீண்டும் சுவிஸ் கூடைப்பந்து சாம்பியன்

மேலும், இந்த சீசனில் ஏற்கனவே Swiss Cup மற்றும் League Cup பட்டங்களையும் வென்றிருந்த ஃப்ரிபூர்க் ஒலிம்பிக், தற்போது தேசிய சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி “Treble” சாதனையை நிறைவு செய்துள்ளது.

சுவிட்சர்லாந்து கூடைப்பந்து வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஃப்ரிபூர்க் ஒலிம்பிக், தனது ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக விளையாட்டு விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். WRS

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button