Swiss News In Tamil

ஜெனீவா மாநிலப் பணிகளை அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே வரையறுக்கும் முன்முயற்சியின் ஓருபகுதி ரத்து

ஜெனீவா மாநிலப் பணிகளை அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே வரையறுக்கும் முன்முயற்சியின் ஓருபகுதி ரத்து

ஜெனீவா குடிமக்கள் இயக்கம் முன்வைத்த, ஜெனீவா மாநில அரசு வேலைகளை அந்தக் கன்டோனில் வசிப்பவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்ற மக்கள் முன்முயற்சியை மாநில செயற்குழு (State Council) பகுதியளவில் செல்லாது எனத் தீர்மானித்துள்ளது.

இந்த முன்மொழிவின் சொற்றொடர்கள் உயர்ந்த சட்டத்துக்கே முரண்படுகின்றன என்று மாநில அரசு காரணம் கூறியுள்ளது. ஏற்கனவே சில துறைகளில் இத்தகைய நிபந்தனைகள் சட்டத்தில் உள்ளன என்றும் அவர்கள் நினைவூட்டுகின்றனர். உதாரணமாக உயர் நிலை காவல் அதிகாரி பதவிகள் மற்றும் குடியுரிமை வழங்கும் பிரிவில் பணிபுரிவோர் தற்போது கான்டனில் வசிப்போர் என்ற நிபந்தனை செயல்பாட்டில் உள்ளது.

N8

மேலும், ஜெனீவாவில் பல துறைகளில் வேலைகளுக்கு மனிதவள பற்றாக்குறை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் இப்படியான புதிய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கு இது சரியான நேரமல்ல என்றும் மாநில அரசு கருத்து தெரிவிக்கிறது.

இந்த முன்முயற்சிக்கு 7,400 பேர் கையெழுத்திட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

© WRS

Related Articles

Back to top button