Swiss News In Tamil

ஸ்விட்சர்லாந்தில் 2025ல் ஊதிய உயர்வு குறைவாள அளவில் பதிவு

ஸ்விட்சர்லாந்தில் 2025ல் ஊதிய உயர்வு குறைவாள அளவில் பதிவு

ஸ்விட்சர்லாந்தில் இந்த ஆண்டு 2025க்கான நிகர ஊதிய உயர்வு சராசரியாக 1.2 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் கூறுகின்றன. 2024ல் 2.1 சதவீதம், 2023ல் 2.5 சதவீதம் உயர்ந்ததை ஒப்பிடும்போது இம்முறை உயர்வு மிகக் குறைவாக உள்ளது.

துறைகளைக் கொண்டு பார்த்தால் கட்டுமானத் துறை தான் அதிக உயர்வைப் பெற்றுள்ளது. அந்தத் துறையில் ஊதியம் 1.7 சதவீதம் உயர்ந்துள்ளது. அதன்பின் நிதி மற்றும் காப்பீட்டு சேவைகள் 1.6 சதவீத உயர்வை கண்டுள்ளன. கல்வித் துறை 1.5 சதவீதம், போக்குவரத்து சேவை 1.5 சதவீதம், மருத்துவம் மற்றும் சமூகப் பராமரிப்பு துறை 1.2 சதவீதம் உயர்வு பெற்றுள்ளதாக தரவில் தெரிகிறது.

news5

ஊதிய உயர்வு வளர்ச்சி மந்தமானது என்றாலும், ஸ்விட்சர்லாந்தின் விலை உயர்வு (inflation) அழுத்தம் கடந்த இரண்டு ஆண்டுகளை விட குறைந்து வருவதால் உண்மையான வாங்கும் திறன் குறையாமல் தக்க வைத்திருக்கும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த வார இறுதியில் ஊதியப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொழிற்சங்க–தொழிலாளர் சந்தை விவாதங்கள் அரசியல் அட்டவணையில் மீண்டும் முக்கிய இடம் பெறும் என உள்ளூர் ஊடகங்கள் எதிர்பார்க்கின்றன.

© Keystonesda

Related Articles

Back to top button