Swiss News In Tamil

சுவிஸ் விமான நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா..? அரிய வாய்ப்பு.!!

சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. சுவிஸ் நிறுவனத்துக்கு 1,500 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

Lufthansa நிறுவனத்துக்கு ஆட்கள் தேவை

சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் Lufthansa நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம், 2023 இறுதிக்குள் 20,000 பேருக்கு பணி வழங்க இருப்பதாக நேற்று அறிவித்தது.

சுவிஸ் விமான நிறுவனத்தில், சுவிஸ், சுவிஸ் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், Lufthansa
சுவிஸ் விமான நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா..? அரிய வாய்ப்பு.!!

கொரோனா காலகட்டத்துக்குப் பின் பயணங்கள் சூடு பிடிக்கத் துவங்கியுள்ள நிலையில், தன் பணியாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் பயணங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்நிறுவனம் ஏராளமானோரை வீட்டுக்கு அனுப்பியது.

என்னென்ன பணிகளுக்கு ஆட்கள் தேவை

பெரும்பாலும், விமானப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதுபோக, தொழில்நுட்பக் கலைஞர்கள், தகவல் தொழில்நுட்பத்துறைப் பணியாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விமானிகள் தேவைப்படுகிறார்கள்.

 

Source:- Lankasri

Related Articles

Back to top button