Swiss News In Tamil

சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக அழைத்த நபர் அதிரடி கைது

சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக அழைத்த நபர் அதிரடி கைது

சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக அழைத்த நபர் அதிரடி கைது சிறுமியுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட முயன்ற ஒருவரை சூரிச் போலீசார் கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர்.

செப்டம்பர் 5, 2024, செவ்வாய்கிழமை மாலை, 13 வயது சிறுமியுடன் திட்டமிட்டிருந்த சந்திப்பிற்கு வந்திருந்த ஒருவரை சூரிச்சின் கன்டோனல் போலீசார் கைது செய்தனர்.

கன்டோனல் காவல்துறையைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் பாலியல் செயல்களுக்காக சிறுமிகளைத் தேடும் இணையத்தில் ஒரு விளம்பரத்தைக் கண்டனர்.

பாலியல்

புலனாய்வாளர்கள் விளம்பரதாரரை ரகசியமாக தொடர்பு கொண்டு 13 வயது சிறுமி போல் காட்டினர். இதன் விளைவாக,ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சந்திப்புக்கு சிறுமிபோல் பேசிய புலனாய்வாளர்கள் நேரில் சென்றதும் 39 வயதான இத்தாலிய நபர் சூரிச் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் சந்தேகத்துக்கு இடமான பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சிறுமியுடன் பாலியல் செயல்களில் ஈடுபட முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

​​​​கடுமையான பாலியல் வன்முறை குற்றவியல் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ்

Related Articles

Back to top button