Swiss News In Tamil

சூரிச் Volketswil இல் நடந்த பயங்கர வாகன விபத்து-.!!

சூரிச் Volketswil இல் நடந்த வாகன பயங்கர வாகன விபத்து-.!! சனிக்கிழமை மதியம் (அக்டோபர் 28, 2023) Volketswil இல் நடந்த வாகன விபத்தில் ஒரு குழந்தையும் ஒரு ஆணும் காயமடைந்தனர். மேலும் மூன்று பேரை பரிசோதிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

பிற்பகல் 3:30 மணியளவில், 32 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் இண்டஸ்ட்ரீஸ் வீதியில் இருந்து வோல்கெட்ஸ்வில் மோட்டார்வே சந்திப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

சூரிச், Volketswil, பயங்கர, வாகன விபத்து

இந்நிலையில் “வாரோ சந்தி” பகுதியில், உஸ்டர்  வீதியில் ஹெக்னாவில் இருந்து நானிகோன் நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு காருடன் மோதியது. வஇருகார்களும் அதிவேகமாக வந்து மோதியதால், 36 வயதான சாரதியும், காரில் பயணித்த 11 வயது குழந்தையும் காயமடைந்துள்ளனர்.

Kantonspolizei Zurich
Quelle: Kantonspolizei Zürich
Bildquelle: Kantonspolizei Zürich

உடனடியாக பாதிகப்பட்ட குழந்தை அவசர கெலிஹப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. விபத்தில் சிக்கிய மீதமுள்ளவர்களுக்கும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

விபத்துக்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக, சூரிச் கன்டோனல் போலீசார் தடயங்களைப் பாதுகாத்து, விபத்தில் சிக்கியவர்களிடமிருந்தும், தகவல் அளித்தவர்களிடமிருந்தும் முதற்கட்ட வாக்குமூலங்களை சேகரித்தனர்.

மேலதிக விசாரணைகள் சீ/ஓபர்லேண்ட் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து சூரிச் கன்டோனல் காவல்துறையால் மேற்கொள்ளப்படும்.

Quelle: Kantonspolizei Zürich
Bildquelle: Kantonspolizei Zürich

Related Articles

Back to top button