Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இலங்கை பிரபல்யத்துக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இலங்கை பிரபல்யத்துக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, இலங்கை பூர்வீகத்தை கொண்ட ராப் பாடகர் Siga அவர்களின் கார் மீது இனவெறி வார்த்தைகள் எழுதப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக அவர் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த ஐனவரி மாத நடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சுவிட்சர்லாந்தின் நவ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

40 வயதான சிகா, சம்பவதினத்தன்று வியாழக்கிழமை காலை பாசல் நகரில் ஒரு படப்பிடிப்பிற்காக சென்றிருந்தபோது, பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நிறுத்துமிடத்தில் தனது காரை நிறுத்தியிருந்தார். காலை சுமார் 10 மணியளவில் காரை அணுகியபோது, அதில் வெள்ளை நிறத்தில் அவதூறு மற்றும் இழிவான எழுத்துகள் எழுதப்பட்டிருந்ததை கவனித்தார்.

முதலில் இது யாரோ செய்த கிண்டல் என்று நினைத்து, அருகிலுள்ள கார் கழுவும் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அந்த எழுத்துகள் சாதாரண பேனாவோ அல்லது அழிக்கக்கூடிய மார்க்கரோ அல்ல; உண்மையான கிராஃபிட்டி நிறம்தான் பயன்படுத்தப்பட்டிருந்தது. காரின் பக்கங்களில் வெள்ளை கோடுகளும், ஆபாச வார்த்தைகளும் எழுதப்பட்டிருந்தது. காரின் முன்பகுதியில் “Raus” (வெளியேறு) என்ற வார்த்தையுடன் அவமதிக்கும் ஓவியமும் வரையப்பட்டிருந்தது.

N6

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழத் தொடங்கிய சிகாவுக்கு, இந்த (ரவ்வுஸ்) “Raus” என்ற எழுத்து நேரடியான இனவெறி தாக்குதலாகவே தோன்றியுள்ளது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த பிற வாகனங்கள் சேதப்படுத்தப்படாத நிலையில், தனது காரை மட்டும் குறிவைத்து இவ்வாறு செய்திருப்பது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என அவர் சந்தேகிக்கிறார்.

இந்த சம்பவம் தன்னை அதிர்ச்சியிலும் விரக்தியிலும் ஆழ்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மரியாதை மற்றும் மனிதநேயம் இன்றும் எல்லோருக்கும் இயல்பான ஒன்றாக இல்லாதது மிகவும் வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக பகல்நேரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் இத்தகைய வெறுப்புச் செய்தி எழுதப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

N6b

நிறம் முழுமையாக அகற்றப்படாததால், பாசலிலிருந்து சூரிச் வரை காரில் இருந்த அவமதிப்பு எழுத்துகளுடன் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது மிகவும் சங்கடமானதும் மன அழுத்தமூட்டுவதுமான அனுபவமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். சுற்றுவட்டார கண்காணிப்பு கமெராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய முடியும் என்ற நம்பிக்கையில் தான் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button