Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் கடும் குளிர்: மைனஸ் 30 டிகிரியை எட்டிய காலநிலை

சுவிட்சர்லாந்தில் கடும் குளிர்: மைனஸ் 30 டிகிரியை எட்டிய காலநிலை

சுவிட்சர்லாந்து முழுவதும் கடும் குளிர் அலை நிலவி வரும் நிலையில், பல பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை இரட்டை இலக்க அளவில் மைனஸ் நிலைக்கு சரிந்துள்ளது. குறிப்பாக La Brévine (லா பிரெவீன்) பகுதியில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி, சுவிட்சர்லாந்தின் சைபீரியா என்ற அதன் பெயருக்கு மீண்டும் ஒரு முறை உரியதாக்கியுள்ளது.

நியூஷாத்தெல் (Neuchâtel) கன்டோனில் அமைந்துள்ள லா பிரெவீன் மட்டுமின்றி, நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆல்ப்ஸ் மலைச்சிகரங்களிலும் இதைவிட கடுமையான குளிர் நிலவியதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை நிலவி வந்த அடர்ந்த பனிமூட்டம் குளிரின் தீவிரத்தை ஓரளவு மறைத்திருந்தாலும், வானம் தெளிவடைவதால் வரும் நாட்களில் மேலும் கடும் உறைபனி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

N6

நாட்டின் முக்கிய நகரங்களும் இந்த கடும் குளிரிலிருந்து தப்பவில்லை. Geneva நகரில் நேற்று இரவு மைனஸ் 9 டிகிரி வெப்பநிலை பதிவான நிலையில், Zurich நகரில் மைனஸ் 8 டிகிரி பதிவானது. அதேபோல் Sion நகரில் மைனஸ் 10 டிகிரியாக வெப்பநிலை சரிந்துள்ளது.

ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு தெற்கே உள்ள பகுதிகளிலும் குளிர் தாக்கம் அதிகரித்துள்ளது. Lugano நகரில் மைனஸ் 5 டிகிரி வரை வெப்பநிலை குறைந்ததாக வானிலை துறை தெரிவித்துள்ளது. இது பொதுவாக மிதமான காலநிலையுடன் காணப்படும் இந்தப் பகுதிக்கு அபூர்வமான நிலையாக கருதப்படுகிறது.

வரும் நாட்களில் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வானிலை நிலவரம் வேகமாக மாறக்கூடிய சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

© WRS

 

Related Articles

Back to top button