Swiss News In Tamil

சூரிச் மைய ரயில் நிலையத்தில் உணவு இயந்திர திருட்டு முயற்சி; நபர் கைது

!சூரிச் மைய ரயில் நிலையத்தில் உணவு இயந்திர திருட்டு முயற்சி; நபர் கைது

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள Zurich Hauptbahnhof அருகே, உணவு வழங்கும் தானியங்கி இயந்திரத்தில் இருந்து பணம் திருட முயன்ற ஒருவரை சூரிச் கன்டோனல் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் 2026 ஜனவரி 4ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

காலை சுமார் 10 மணியளவில், ஒரு உணவு இயந்திரத்தை யாரோ கையாள்ந்து கொண்டிருப்பதாக சூரிச் கன்டோனல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில நிமிடங்களுக்குள் சந்தேக நபர் கண்டறியப்பட்டு, தடுத்து நிறுத்தி சோதனை செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த 45 வயதுடைய ருமேனிய குடிமகனான அந்த நபர், உணவு இயந்திரத்திலிருந்து பணம் எடுக்க முயன்றதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இதற்கு முன்பு பல டஜன் உணவு இயந்திரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

N6 2

நபரையும், அவர் பயன்படுத்திய வாகனத்தையும் சோதனை செய்தபோது, பல்வேறு திருட்டுப் பொருட்களும், 2,000 சுவிஸ் ஃப்ராங்குகளைத் தாண்டிய பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட நபர் Staatsanwaltschaft Zürich Limmat-க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து Kantonspolizei Zürich பொதுமக்களுக்கு தகவல் வெளியிட்டு, பொது இடங்களில் உள்ள தானியங்கி இயந்திரங்களை குறிவைக்கும் குற்றச்செயல்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

© Kapo ZH

Related Articles

Back to top button