Swiss News In Tamil

வாட் கன்டோனில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை

வாட் கன்டோனில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை

வாட் கன்டோனில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை சுவிட்சர்லாந்தின் வாட் கன்டோனில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டு அதிலிருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

எவ்வளவு தொகை கொள்ளையிடப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. Rue Centrale எனும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக ஏடிஎம் பொருத்தப்பட்டிருந்த கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வாட் கான்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ATM1 1024x832 1

வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இயந்திரம் வெடிக்கச் செய்யப்பட்ட காரணத்தினால் இவ்வாறு பொலிஸார் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.

கன்டோன் பொலிஸார் மற்றும் மத்திய போலீஸார் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டில் இதுவரையில் ஏடிஎம் இயந்திரங்கள் மீது 25 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 32 தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து எல்லை பகுதி கிராமங்கள் மற்றும் நகரங்களில் அதிக அளவில் இவ்வாறான ஏடிஎம் இயந்திரங்கள் மீதான தா

Related Articles

Back to top button