Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம்

சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கோடை காலம் முடிவடையும் நிலையில் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் மழை மற்றும் இடிப்புயல் ஏற்படும் எனவும் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. சில வேளைகளில் கனத்த மழை பெய்யும் சாத்தியங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களிலும் மழையுடனான காலநிலை நீடிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.






