Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் சாரதிகள் மற்றும் பாதசாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தகவல்.!!

சுவிட்சர்லாந்தில் சாரதிகள் மற்றும் பாதசாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தகவல்.!! சுவிட்சர்லாந்தில் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் வீதிகளில் பயணம் செய்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனி காலப்பகுதியில் தினம் காலை வேளையிலும் நாள் முழுவதிலும் வீதிகள் வழுக்கும் தன்மையை கொண்டதாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்ணாடியைப் போன்ற பனிப் படலம் (Black Ice)பாதைகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Black Ice,சுவிட்சர்லாந்தில்,சூரிச்சின் உன்டர், வெயின்லான்ட், பேசலின் பிரிக்டேல்,சுர்ஸிபிய்ட்

 

சூரிச்சின் உன்டர், வெயின்லான்ட், பேசலின் பிரிக்டேல்,சுர்ஸிபிய்ட், வெசர்ஸ்கூல்ஸ் பகுதிகளிலும், சொலோத்ரோன் பகுதியிலும் இவ்வாறான நிலையை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகன சாரதிகளைப் போன்றே பாதசாரிகளும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், பாதைகள் வழுக்கும் தன்மையைக் கொண்டவையாகவே காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button