வின்டர்தூரில் பார்சல் திருடன் கைது – 50,000 பிராங்குகள் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
வின்டர்தூரில் பார்சல் திருடன் கைது – 50,000 பிராங்குகள் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

வின்டர்தூரில் பார்சல் திருடன் கைது – 50,000 பிராங்குகள் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
சுவிட்சர்லாந்தின் வின்டர்தூர் (Winterthur) நகரைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், வீடுகளின் முன் கூரியர் சேவைகள் விட்டு சென்ற பார்சல்களை தொடர்ந்து திருடிய வழக்கில் 56 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் ஆரம்பத்தில் வீடுகளின் வாசல்களில் வைக்கப்பட்டிருந்த பார்சல்களை திருடி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பார்சல்களில் குழந்தைகள் ஆடைகள் முதல் வீட்டு வாசனைப் பொருட்கள் வரை பல பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பின்னர், அதனால் கிடைத்த வருமானம் போதுமானதாக இல்லை என நினைத்த அவர், விலை உயர்ந்த ரோபோ வெக்க்யூம் கிளீனர்கள் மற்றும் தானியங்கி தரை சுத்திகரிப்பு கருவிகள் போன்ற பொருட்களையும் குறிவைக்க ஆரம்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில சாதனங்களின் மதிப்பு 1,000 சுவிஸ் பிராங்குகளைத் தாண்டியதாக கூறப்படுகிறது.

Tages-Anzeiger வெளியிட்ட தகவலின்படி, பார்சல் திருட்டுகள் மற்றும் பிற பொருட்கள் உட்பட மொத்தமாக சுமார் 50,000 சுவிஸ் பிராங்குகள் மதிப்பிலான பொருட்களை அவர் திருடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மொத்தம் 18 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவருக்கு நிபந்தனையற்ற 56 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நபருக்கு ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஏழு முந்தைய தண்டனைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் ஒரு ஹோட்டலில் இருந்து படுக்கைப் பொருட்களை திருடிய சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2025 செப்டம்பர் மாதத்தில் Winterthur மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்த போதும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பின்னர் ஒரு மாதத்திற்குப் பிறகு, Hotel Plaza-வில் இருந்து அணுகல் அட்டை மற்றும் படுக்கைப் பொருட்களை திருடிய சம்பவத்திற்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
கோகெய்ன் பழக்கம் காரணமாக, சுமார் 10,000 பிராங்குகள் மதிப்புள்ள சைக்கிளை வெறும் 350 பிராங்குகளுக்கு விற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கட்டுமானத் தளங்களில் இருந்த வேலை கருவிகள் உட்பட கிடைத்த அனைத்தையும் திருடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், நீதிமன்றத்தில் குற்றவாளி தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. “நான் பெரிய தவறு செய்துவிட்டேன்” என அவர் கூறியதுடன், தனது இரண்டு குழந்தைகளுக்காக வாழ்க்கையை மாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது அவருக்கு 250,000 சுவிஸ் பிராங்குகள் கடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதால், அந்த இழப்பீடு எவ்வாறு செலுத்தப்படும் என்பது தெளிவாக இல்லை. @Tages-Anzeiger





