Swiss News In Tamil
சூரிச் நகரில் வாடகை தொகை அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம்
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் வாடகை தொகை அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கானவர்கள் சூரிச் நகரில் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் பேரணியாக பயணித்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளுக்கு காணப்படும் தட்டுப்பாடு மற்றும் அதிக தொகையில் வாடகை அறவீடு செய்யப்படுவது என்பது குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் லாபம் ஈட்டும் நோக்கில் வீட்டு உரிமையாளர்கள் அதிக வாடகை தொகைக்கு வீடுகளை வாடகைக்கு விடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான போலீசார் கடமையில் அமர்த்தப்பட்டு இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. போராட்டம் காரணமாக வீதி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





