Swiss News In Tamil

ஒரு நாலு நாள் ஜெயிலில் இருந்துவிட்டு போகலாம்: அழைப்பு விடுக்கும் சுவிஸ் மாகாணம்

ஒரு நாலு நாள் ஜெயிலில் இருந்துவிட்டு போகலாம்: அழைப்பு விடுக்கும் சுவிஸ் மாகாணம்

சுவிஸ் மாகாணம் ஒன்று, நான்கு நாட்கள் சிறையில் செலவிட வருமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

விடயம் என்னவென்றால், Zurich இல் புதிதாக சிறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

அதில் கைதிகளை அடைப்பதற்கு முன், சோதனை முயற்சியாக, அந்த சிறையில் தங்கியிருக்க வருமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை முயற்சியில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கப்படாது. ஆனால், மூன்று வேளை நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு அமைதியாக ஓய்வெடுக்கலாம்

Zurichஇல் வாழும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த சோதனை முயற்சியில் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் அவர்கள் நான்கு நாட்கள் சிறையில் தங்கியிருக்கவேண்டும். நான்கு நாட்கள் சிறையில் இருக்க பிடிக்கவில்லையென்றால், இடையிலேயே வெளியேறவும் அனுமதி உண்டு.

swiss jeil

சிறை எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இந்த சோதனை முயற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

காதலர் தினத்தையொட்டி, எதையாவது வித்தியாசமாக முயற்சி செய்யலாம் என விரும்புபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் ஜோடியாக சிறையில் தங்க முடியாது. ஆண்கள், ஆண்களுக்கான சிறையிலும், பெண்கள் பெண்களுக்கான சிறையிலும்தான் தங்க முடியும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button