Swiss News In Tamil

ஜெனீவா பள்ளிகளில் எல்லை தாண்டி வரும் மாணவர்களை தவிர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடு

ஜெனீவா பள்ளிகளில் எல்லை தாண்டி வரும் மாணவர்களை தவிர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடு

செலவைக் குறைக்கும் முயற்சியாக, ஜெனீவா அதிகாரிகள் கடந்த ஜூன் மாத கல்வியாண்டு முடிவில், 2026 முதல் அண்டை பிரான்ஸ் பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் இனி ஜெனீவா மாகாண பள்ளிகளில் படிக்க முடியாது என்று முடிவு செய்தனர்.

ஆனால் இப்போது அந்த முடிவு அரசியல் மற்றும் சட்ட ரீதியாகப் பெரிய விவாதமாக மாறியுள்ளது. பிரான்சைச் சேர்ந்த 40 குடும்பங்கள், இந்த நடவடிக்கைக்கு எதிராக இரண்டு மேல்முறையீடுகளை தாக்கல் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன.

652e26640f439

இரண்டு மேல்முறையீடுகளும் ஜெனீவா நீதிமன்றத்தின் அரசியல் சட்ட பிரிவில் பதிவு செய்யப்பட உள்ளது.

பிரான்ஸ் குடும்பங்கள் முன்வைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று: சுவிட்சர்லாந்து–ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான மக்கள் சுதந்திரமாகச் செல்லும் ஒப்பந்தத்தை இந்த தடை மீறுகிறது என்பதே.  இந்த விவாதம் தற்போது சூடுபிடித்து வருகின்றமை குறிப்பிடத்கத்து.

@WRS

Related Articles

Back to top button