Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் ஊசியோ வலியோ இல்லாத ஒரு கொரோனா தடுப்பூசி முறை.!!

சுவிட்சர்லாந்தில் ஊசியோ வலியோ இல்லாத ஒரு கொரோனா தடுப்பூசி முறை.!! இந்த கோவிட் வந்தாலும் வந்தது, அதனால் பல்வேறு தரப்பினருக்கு பலவித பிரச்சினைகள்…

சிலருக்கு பொதுவாக தடுப்பூசி என்றாலே பயம், சிலருக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதால் கொரோனா தடுப்பூசியைப் பார்த்து பயம், வேறு சிலருக்கோ ஊசியைப் பார்த்தாலே பயம்.

இந்நிலையில், பெரிய ஊசியும் இல்லாமல், அதிக வலியும் இல்லாமல், கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறை ஒன்றை சுவிட்சர்லாந்து சோதனை செய்துகொண்டிருக்கிறது.

இந்த முறையில், ஒரு சிறிய ஸ்டிக்கர் போல காணப்படும் ஒரு விடயத்தை, கையில் வைத்து அழுத்தினாலே, அதிலிருக்கும் ஆயிரக்கணக்கான கண்ணுக்குத் தெரியாத நுண் ஊசிகள் ( micro needles), லேசாக தோலுக்குள் கொஞ்சமாக நுழைந்து சரியாக அவற்றின் வேலையைச் செய்துவிடும். அதாவது, தடுப்பு மருந்தை உடலுக்குள் அனுப்பிவிடும்.

சுவிட்சர்லாந்தில்

இதனால் வலி இருக்காது என்பதுடன், ஊசியைப் பார்த்து பயப்படுவோருக்கு, இது ஒரு வரப்பிரசாதம்.

இந்த முறையை பிரித்தானிய நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. முதன்முறையாக Lausanne பல்கலைக்கழக மருத்துவமனையில் சோதனை முயற்சியாக இந்த முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இந்த முறையில் செலுத்தப்படும் தடுப்பு மருந்து மிகவும் வலிமையான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என நம்பப்படுவதால், அதற்கு பூஸ்டர் டோஸ் போடவேண்டிய அவசியம் கூட இருக்காது என கருதப்படுகிறது.

அத்துடன், இந்த முறையில் பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்தும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செல்களைக் கொன்று, அதிலிருந்து தயாரிக்கப்படுவதால், அது நீண்ட காலம், அதாவது பல ஆண்டுகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வின் முதல் கட்ட முடிவுகள் ஜூன் மாதத்தில் கிடைக்கப்பெற உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button