Swiss News In Tamil

வாகன ஓட்டிகளுக்கு லுசேர்ன் போலீசார் விடுத்த அவசர எச்சரிக்கை.!!

வாகன ஓட்டிகளுக்கு லுசேர்ன் போலீசார் விடுத்த அவசர எச்சரிக்கை.!!

லூசெர்ன் போலீஸ், தவறான இடத்தில் கார் நிறுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் தொடர்பில் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது..

குறுகிய நேரம் கூட கார்களை தவறான இடத்தில் நிறுத்துவதால் போக்குவரத்து சிக்கலடைந்துக் கொள்ளும் மற்றும் பொதுச்சேத பாதுகாப்பு பாதிக்கப்படும். மேலும், தவறான இடத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெறும் தடைமட்டுமல்ல, பலவீனமான சூழலில் மிக ஆபத்தானதாகவும் மாறக்கூடும் என்பதை நினைவூட்டுகிறது.

அதனால், போக்குவரத்து விதிகளை பின்பற்றி கார்கள் எப்போதும் சரியான இடத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று அனைத்து ஓட்டுநர்களுக்கும்  எச்சரிக்கை விடுக்கப்படுவதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

Luzeurn Polizei

இவ்வாறு தேவையற்ற இடங்களில் வாகனங்களை குறிகிய நேர இடைவெளிகளில் நிறுத்தும்போது குறிப்பாக தீயணைப்பு மற்றும் அம்புலன்ஸ் போன்ற அவசர சேவைகளின் போதான வாகன பயணத்திற்கு அதிக இடையூறாக அமையும் என்பதையும் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே நீங்கள் தவறான இடங்களில் வாகனங்களை இவ்வாறு நிறுத்தி வைப்பதால் வீணான தட்டப்பணம் செலுத்த வேண்டும் எனவும் இது, பொதுப் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். எனவும் லுசேர்ன் காவல்துறை தெரிவித்துள்ளது.

@Kapo Lu

Related Articles

Back to top button