சென்ட்காலன் கன்டோனில் நடந்த பயங்கர விபத்து : ஒருவர் பலி
சென்ட்காலன் கன்டோனில் நடந்த பயங்கர விபத்து : ஒருவர் பலி
சென்ட்காலன் கன்டோனில் புதன்கிழமை அதிகாலை இரண்டு கார்கள் மற்றும் ட்ரக் வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 68 வயதான சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கோமிஸ்வால்டில் இருந்து ரிக்கன் (ricken) தனது காரை ஓட்டிச்சென்ற 37 வயதுடைய ஒருவர், அதிகாலை 5:20 மணியளவில் நீண்ட வளைவில் மற்றொரு காரையும் ட்ரக் வானத்தையும் முந்திச் செல்ல விரும்பினார்.

அதன் போதே அவரின் காருக்கு எதிரே வந்த இன்னுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து நேர்ந்துள்ளது. பலத்த மோதல் காரணமாக இரண்டு கார்களும் அருகிலுள்ள புல்வெளியில் தூக்கி வீசப்பட்டன. விபத்துக்குள்ளான ட்ரக் வண்டியும் கார் மோதி பலத்த சேதமடைந்தது.
குறித்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற 68 வயதான நபர் ஒருவர் சம்பவ இடத்திலையே பலியாகியுள்ளார். அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், சென்ட்காலன் கன்டோனல் போலீசார், விபத்துக்கான சரியான காரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஆதாரம்: St.Gallen Cantonal Police Image source: St.Gallen Cantonal Police





