Swiss News In Tamil

ஹெல்சானா பெயரில் போலி இமெயில் ⚠️ கார்டு விவரங்களை திருட முயற்சி!

ஹெல்சானா பெயரில் போலி இமெயில் ⚠️ கார்டு விவரங்களை திருட முயற்சி!

சைபர் குற்றவாளிகள், இப்போது Helsana -வின் பெயரில் போலி இமெயில்களை அனுப்பி, மக்கள் எண்ணிக்கையைக் குறிவைக்கும் மோசடியை மேற்கொண்டு வருகின்றனர்.

480 சுவிஸ் பிராங்க்  திருப்பிச் செலுத்தப்படும்” எனும் வாக்குறுதிகளுடன் வரும் இமெயிலில், ஒரு பொய்யான ரீஃபண்ட்(Refund) படிவத்தை நிரப்பச் சொல்கின்றனர். இதில் உங்கள் கிரெடிட் கார்ட் விவரங்களை பெறுவதே அவர்கள் இலக்கு.

🧠 இவர்கள் அனுப்பும் இணையதள இணைப்பு மிகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும். ஆனால், உங்கள் தகவல்களை உள்ளிடும் தருணத்தில், உங்கள் கிரெடிட் கார்ட் உடனே டெபிட் செய்யப்படும்.

wppi image polizei newsWebsite02 0721e54751988cf379d5ae9be539d362 4 scaled 1536x922 1

அதன்பிறகு, உங்கள் வங்கியில் இருந்து வரும் பாதுகாப்பு OTP/SMS குறியீட்டையும் கோருகிறார்கள், இரட்டை பாதுகாப்பு முறையை (Two-factor authentication) தாண்டி பணம் திருட  முயற்சி மேற்கொள்ளுகிறார்கள்.


📌 நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

✅ இவ்வாறான இமெயில்கள் வந்தால், அவற்றை Cybercrimepolice.ch க்கு அனுப்பி விடுங்கள்.
✅ உடனே அந்த இமெயிலை அழிக்கவும் அல்லது உங்கள் Spam/Junk கோப்புறையில் நகர்த்தவும்.
✅ எப்போதும் இமெயிலில் வரும் இணையதள இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள்.
✅ உங்கள் தனிப்பட்ட/வங்கித் தகவல்களை பிறர் கோரும்போது, எந்த நேரத்திலும் அதனை பகிர வேண்டாம்.
✅ சந்தேகமிருந்தால், நேரடியாக அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு சரிபார்க்கவும்.


❗️நீங்கள் ஏற்கனவே உங்கள் தகவல்களை கொடுத்துவிட்டால்:

  1. உங்கள் வங்கியை உடனடியாக தொடர்பு கொண்டு, கார்டுகளை முடக்கச் சொல்லுங்கள்.
  2. அருகிலுள்ள மாநிலக் காவல் நிலையத்தில் (Kantonspolizei) முன்பதிவு செய்து, புகார் அளிக்கவும்.

@Cybercrimepolice.ch

Related Articles

Back to top button