Swiss News In Tamil

லுசேர்ன்னில் விரைவில் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படவுள்ளது

லுசேர்ன்னில் கஞ்சா விரைவில் சட்டப்பூர்வமாக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள மருந்தகங்களில் சுமார் 250 குடியிருப்பாளர்கள் விரைவில் கஞ்சா பொருட்களைப் பெற முடியும்.

ஏனென்றால், கஞ்சாவின் ஒழுங்குபடுத்தப்பட்ட விற்பனையால் என்ன உடல்நலம் மற்றும் சமூக விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன் லுசேர்ன் பல்கலைக்கழகங்களால் ஆய்வு ஒன்று நடத்துப்படவுள்ளது.

லூசர்னில் விரைவில் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படவுள்ளது

உள்ளூர் மருத்துவர் கிறிஸ்டியன் ஸ்டூடர் இதுபற்றி கூறுகையில், ‘கொள்முதலை ஒழுங்குபடுத்துவது, லுசேர்ன்னில் உள்ள சிக்கலான கஞ்சா நுகர்வை எதிர்ப்பதற்கான ஒரு அணுகுமுறையாக இருக்கலாம் என தெரிவிக்கிறார்.

குறிப்பிட்ட ஆய்வில் பங்கேற்க விரும்பும் எவரும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் ஒரு வருடமாவது நகரத்தில் வசித்தவராகவும், தொடர்ந்து கஞ்சாவை உட்கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

பாஸல், சூரிச், ஜெனிவா மற்றும் பேர்ன் ஆகிய இடங்களில் ஏற்கனவே இதே போன்ற திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button