Swiss News In Tamil

ஜெனிவாவில் போலியான சொகுசு கைக்கடிகாரம் கடத்தியவர் கைது

ஜெனிவாவில் போலியான சொகுசு கைக்கடிகாரம் கடத்தியவர் கைது!! 42 வயதான பிரெஞ்சுக்காரர் ஒருவர் ஜெனிவா விமான நிலைய சுங்கச்சாவடியில் அதிகளவான போலியான ஆடம்பர கைக்கடிகாரங்கள் மற்றும் இரண்டு பிராண்டட் பைகளை அனுமதியின்றி சுவிட்சர்லாந்திற்கு இறக்குமதி செய்ய முயன்றபோது பிடிபட்டார்.

அவர் பல்லாயிரக்கணக்கான பிராங்குகளை கட்டணமாகவும் அபராதமாகவும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் இந்த மாத தொடக்கத்தில் லண்டனில் இருந்து விமானத்தில் ஜெனிவா வந்தடைந்தார். சுங்க அதிகாரிகள் விசாரித்த போது ​​​​அவர் தன்னிடம் இரண்டு கடிகாரங்கன் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில்

இருப்பினும்இ சுங்க அதிகாரிகள் அவரது சூட்கேஸை சோதனை செய்ததில், அந்த நபர் நிறைய கடிகாரங்களை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

லக்கேஜை சோதனை செய்தபோது, ​​18 கைக்கடிகாரங்கள் மற்றும் ஆடம்பர தோல் பொருட்களுடன் இரண்டு பைகள் இருப்பதை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.

விசாரணையின் போது, ​​13 கைக்கடிகாரங்கள் போலியானவை என, மத்திய சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகம் அறிவித்தது.

மீதமுள்ள ஐந்து உண்மையான கடிகாரங்களில், இரண்டை தவிர ஏனைய கடிகாரங்கள் மற்றும் சொகுப்பைகள் என்பன சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டமை தெரியவந்துள்ளது.

பொருட்களின் மதிப்பு பல லட்சம் பிராங்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க சட்டங்களை மீறியதற்காக நபர் அபராதம் செலுத்தவேண்டும் எனவும் சட்டரீதியாக வழக்கினை எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button