Swiss News In Tamil

சூரிச்சில் புதிய உணவகம் திறக்கவிருந்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!!

சூரிச்சில் புதிய உணவகம் திறக்கவிருந்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!!

சூரிச்கில் உள்ள பிரபலமான Europaallee பகுதியில் புதிதாக திறக்கவிருக்கும் “Casi Casa” எனும் உணவகத்திற்கு எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திறப்பு விழாவுக்கு சில நாட்களே முன்பாக, உணவகத்தின் முழு வெளிப்புற இருக்கைகள் மற்றும் மேசைகள் – மொத்தம் 30 மேசைகள் மற்றும் 60 இருக்கைகள் – இரவில் முற்றிலுமாக மர்மமாகக் கடத்தப்பட்டன.

இந்த சம்பவம் வெள்ளி இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து உணவகத்தின் உரிமையாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

“எங்களது முழு வெளிப்புற அமர்வுகள் காணாமல் போய்விட்டன. இது Zürich நகரின் மையத்தில் நடந்திருக்கிறது என்பதே நம்ப முடியவில்லை,” என உரிமையாளர்  வியப்புடன் கூறுகிறார். மேலும் இந்த திருட்டு திட்டமிட்ட குற்றமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார். “இவை எல்லாம் சங்கிலியுடன் பூட்டிய நிலையில் இருந்தன. இது சாதாரண திருட்டல்ல. ஒரு பெரிய வாகனத்துடன் வந்திருக்கவேண்டும்.” எனவும் அவர் தெரிவித்தார்.

Diebstahl Restaurant Casi Casa in Zurich
@20min

Zürich நகர போலீசில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், திருட்டில் ஈடுபட்டவர்கள் யார்? திருடப்பட்ட பொருட்கள் எங்கே? என்பது இன்னும் மர்மமே. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விண்ணப்பங்கள் இதுவரை எந்த தடயத்தையும் தரவில்லை.

இந்த சம்பவம், சூரிக் போன்று உயர் பாதுகாப்பு கொண்ட நகரில் கூட இப்படி திட்டமிட்ட திருட்டுகள் நடக்கலாம் என்பது சுட்டிக்காட்டுகிறது. புதிய தொழில் தொடக்கத்திற்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், உரிமையாளர்கள் இப்போதும் விரிவான உதவிக்கு காத்திருக்கின்றனர்.

@ 20 Min

Related Articles

Back to top button