Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் ஏரியில் குளிப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை.!!!

சுவிட்சர்லாந்தில் ஏரியில் குளிப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை.!!!

சூரிய வெயிலோடு கோடை வந்ததும், சுவிட்சர்லாந்தின் ஏரிகளுக்கு மக்கள் நீராட வரும் நேரமும் ஆரம்பிக்கிறது. ஆனால் நீர்க் குளிப்பை கலைத்துவிடக் கூடிய ஒரு சிக்கல் தற்போது எழுந்துள்ளது. ஏரியில் உள்ள வாத்துக்களில் இருந்து கிருமிகள் தண்ணீரில் கலந்து மனிதர்களின் தோலினுள் புகுந்து கடும் அரிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வகை கிருமிகள் Duck fleas எனப்படுகிறது.

Duck fleas உண்மையில் ஒருவித சிறிய புழுக்கள் ஆகும். பறவைகள் தங்களது மலத்துடன் வெளியிடும் முட்டைகள் நீரில் கரைந்து, அதிலிருக்கும் நுண்ணுயிர் தாம் தொடர்ந்து வாழ்வதற்காக விலங்குகளை தேடி களத்தில் இறங்குகின்றன. பொதுவாக இவை வாத்துகள் மற்றும் நீர்நாய்கள் போன்ற நீர்வாழ் உயிரினங்களைத் தாக்கும். ஆனால் அவை அந்நேரத்தில் ஏரியில் குளிக்கும் மனிதர்களை வாத்துகளாக தவறாக புரிந்து, தோலில் ஊடுருவும் முயற்சி செய்கின்றன.

மனிதர்களை பாதிக்கும் போது என்ன நடக்கிறது?

இந்த புழுக்கள் தோலில் ஊடுருவியதும் உடனடியாக சதைபேதம் ஏற்படுவது இல்லை. ஆனால், அவை மனித உடலில் நுழைய முற்பட்டதும் அது தனக்கு ஏற்ற இடம் இல்லை என்பதால் உடலில் நுழைந்ததும் இறந்துவிடுகின்றன. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மணி நேரத்திற்குள் கடும் அரிப்பு ஏற்படலாம். 24 முதல் 48 மணி நேரத்துக்குள் இது மேலும் தீவிரமாகி, சிறிய சிவப்புகள், புள்ளிகள் போன்ற ஒவ்வாமை தோன்றலாம். குழந்தைகள் மற்றும் அதிக நேரம் குறைவான நீர்மட்டப் பகுதிகளில் நீராடும் நபர்கள் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

f pulci anatra laghi prurito acque 1k351

இதை  தவிர்க்க குறைவான ஆழமுள்ள நீர்பகுதியில் நீராடுவதை தவிர்க்க வேண்டும். ஆழமான நீரில் இறங்குவது பாதுகாப்பானது. நீராடிய பிறகு உடனடியாக நீண்ட நேரம் ஷவரில் குளித்து, உலர்த்தும் துணியால் உடலை நன்கு துடைக்க வேண்டும். மிக முக்கியமாக, நீர்நாய்கள், வாத்துகள் போன்ற நீர் உயிரினங்களை உணவு கொடுத்து ஈர்க்கக் கூடாது. அவை அந்த பகுதியில் மலத்தைவிடுவதன் மூலம் இந்த புழுக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

இவை எப்போது அதிகம் ஏற்படுகின்றன?

23 டிகிரி செல்சியஸ்க்கு மேல் நீரின் வெப்பநிலை சென்றுவிட்டால், வாத்துக்கள் வெளியிட்ட மலத்தில் இருந்து இந்த உயிரிகள் வெளியில் வர ஆரம்பிப்பதாக சொல்லப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் இந்த நிலை தற்போது உள்ளது.

இவ்வாறான நிலமை ஏற்பட்டால், இதற்கு மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் தேவையில்லை. அரிப்பின் போது தோலை சொறியாமல் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button