Swiss News In Tamil

யூதர்களுக்கு எதிராக சுவிசில் வெளியான அறிவிப்பு – பலரும் அதிர்ச்சி.!!

யூதர்களுக்கு எதிராக சுவிசில் வெளியான அறிவிப்பு – பலரும் அதிர்ச்சி.!! டாவோஸ் மலையில் யூதர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு விடுவதில்லை என்ற அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டாவோஸில் உள்ள பிஸ்கா மலை நிலையத்தில் ஹீப்ரு மொழியில் ஒட்டப்பட்ட ஒரு பலகையில் யூதர்கள் இனி விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு எடுக்க அனுமதி இல்லை என அறிவிக்குப்பட்டிருக்கிறது.

சூரிச்நகரின் யூத லோக்கல் கவுன்சிலர் ஜெஹுடா ஸ்பீல்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் இது பற்றிய தனது கருத்தை தெரிவித்துள்ளார். இவ்அறிவிப்பு தனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த யூத சமூகத்தினருக்கே அதிர்ச்சியளிக்கும் ஒரு விடயமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யூதர்களுக்கு எதிராக சுவிசில்

இந்நடவடிக்கை ஒரு பாரபட்சமான ஒரு நடவடிக்கை எனவும் இது தொடர்பாக உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்டவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்மை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button