Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் உள்ள சுகாதார அறக்கட்டளை மீது சைபர் தாக்குதல்

சுவிட்சர்லாந்தில் உள்ள சுகாதார அறக்கட்டளை மீது சைபர் தாக்குதல்

சுவிட்சர்லாந்தில் சுகாதாரத் துறையில் செயல்படும் “Radix Foundation” எனப்படும் இலாப நோக்கமற்ற அமைப்பிற்கு எதிராக ரான்சம் வேர் (ransomware) வகை  Cyber தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கட்கிழமை உறுதி செய்துள்ளனர். இந்த தாக்குதலால் முக்கிய தரவுகள் திருடப்பட்டதுடன், அவை குறியாக்கம் (encrypt) செய்யப்பட்டு, பின்னர் டார்க்நெட்டில் (darknet) வெளியிடப்பட்டுள்ளன.

இந்த சைபர் தாக்குதலுக்குப் பிறகு, Radix அமைப்பு சுவிட்சர்லாந்தின் தேசிய இணைய பாதுகாப்பு மைய (NCSC – National Cyber Security Centre) தலைமையகம் மூலம் விசாரணை மற்றும் தகவலறிக்கையை தொடங்கியுள்ளது. Radix அமைப்பு, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுடன் பணிபுரிந்து வரும் நிலையில், அதில் சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி நிர்வாகத்துக்குட்பட்ட பல பிரிவுகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Switzerland says a ransomware attack1

தற்போது, இந்த தாக்குதலால் எந்த சேவைகள் மற்றும் தரவுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், Radix அமைப்பு அரசு கணினி அமைப்புகளுக்கு நேரடி அணுகல் (direct access) இல்லாததால், ஹேக்கர்கள் அரசுத் தரவுகளுக்குள் நுழையவில்லை என்பது அதிகாரிகளின் உறுதிப்படுத்தலாகும்.

இந்த சம்பவம், சைபர் பாதுகாப்பின் அவசியம் மற்றும் தரவுகளை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.

@KeystoneSDA

Related Articles

Back to top button