Swiss News In Tamil

போர் பதட்டம் : ஈரானிலிருந்து சுவிட்சர்லாந்து தூதுவர் வெளியேற்றம்

போர் பதட்டம் : ஈரானிலிருந்து சுவிட்சர்லாந்து தூதுவர் வெளியேற்றம்

ஈரானுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் வியாழன்று இரவு தெஹ்ரானை விட்டுச் சென்றதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சர் இக்னேசியோ காசிஸ் அறிவித்துள்ளார்.

தூதுவர், தெஹ்ரானில் உள்ள தூதரகத்தின் ஏழு உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை காலை அசர்பைஜானில் பாதுகாப்பாக வந்து சேர்ந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, செவ்வாயன்று தூதரகத் தலைவர் வெளியிட்ட முடிவின்படி தூதரகம் தற்காலிகமாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஐந்து தூதரக உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் நகரத்தைவிட்டுப் புறப்பட்டனர்.

21 61ce56239c444

பாதுகாப்பு கருதி உபகரணங்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டுள்ளன, என்றும் காசிஸ் தெரிவித்துள்ளார். தூதரக கட்டிடங்கள் தற்போது மூடப்பட்ட நிலையில், பொதுவழிப் பணியாளர்கள் எவரும் அங்கு இல்லை, ஆனால் ஒரு பாதுகாவலர் மட்டும் கட்டிடத்தில் இருக்கிறார் எனக் கூறப்பட்டது.

“அவர்கள் இன்னும் எங்கள் ஊழியர்களாகவே இருக்கிறார்கள்,” என வெளியுறவு அமைச்சர் காசிஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button