Swiss News In Tamil

சூரிச் விமான நிலையத்தில் கடும் காற்றால் விமான போக்குவரத்து பாதிப்பு

சூரிச் விமான நிலையத்தில் கடும் காற்றால் விமான போக்குவரத்து பாதிப்பு

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் கடும் காற்று காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குளிர் காற்றான இந்தக் காற்றுக்கு  ‘பீஸ் காற்று’ (Bise) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பலத்த காற்று விமான நிலையத்தின் விமான போக்குவரத்தை கடுமையாக பாதித்தது. பல்வேறு விமானங்கள் தாமதம் செய்யப்பட்டதுடன், சில விமானங்கள் முற்றாகவே ரத்து செய்யப்பட்டன.

சூரிச் விமான நிலையத்தில்

கிழக்கு – வடகிழக்கு திசையிலிருந்து வீசும் பீஸ் காற்று காரணமாக, காலை 9 மணி முதல் விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரன் வே 14 வழியாக வடதிசையிலிருந்து விமானங்கள் தரையிறக்கப்பட்டு, ரன் வே 10 வழியாக கிழக்குத்திசையில் புறப்படுவதாக திட்டமிடப்பட்டது.

மதிய நேரம் வரை SWISS ஏர்லைன்ஸின் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், பிரசெல்ஸ், நீஸ், டுஸல்டார்ஃப், பெர்லின், ஸ்டுட்கார்ட், ஹனோவர், போலோனியா, லண்டன் ஹீத்துரோ மற்றும் ஃபிராங்க்பர்ட் நோக்கிப் பயணம் செய்யவிருந்த விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button