Swiss News In Tamil

வெளிநாடுகளிலிருந்து பிள்ளைகள் தத்தெடுக்கப்படக்கூடாது..!!! சுவிஸ்

வெளிநாடுகளிலிருந்து பிள்ளைகள் தத்தெடுக்கப்படக்கூடாது..!!! வெளிநாடுகளில் இருந்து பிள்ளைகள் தத்தெடுக்கப்பட கூடாது என சுவிட்சர்லாந்தின் அமைச்சர் பீட் ஜென்ஸ் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக பெரும் எண்ணிக்கையிலான பிள்ளைகள் களவாடப்பட்டு சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமான முறையில் தத்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து

வெளிநாட்டிலிருந்து பிள்ளைகளை தத்தெடுக்கும் நடவடிக்கை முற்றுமுழுதாக தடை செய்ய வேண்டும் என ஜேம்ஸ் கோரிக்கையை விடுத்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து பிள்ளைகள் தத்தெடுக்கப்படுவதை தடுக்கும் யோசனை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை தத்தெடுப்பதன் மூலம் இடம்பெறக்கூடிய துஷ்பயோகங்கள் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட உள்ளது.

அண்மை நாட்களாக வெளிநாடுகளில் இருந்து பிள்ளைகள் தத்தெடுப்பதில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளதாகவும் இந்த பிரச்சனைகளை தடுத்து நிறுத்துவதற்காக சட்டங்கள் இயற்றப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button