Swiss News In Tamil

சுவிஸ் விமான நிலையங்களில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்

சுவிஸ் விமான நிலையங்களில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்

விமான நிலையங்களில் முக அங்கீகார முறை அல்லது facial recognition எனப்படும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யும் முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகின் சில நாடுகளில் ஏற்கனவே இந்த முக அங்கீகார நடைமுறை விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சுவிட்சர்லாந்திலும் இந்த முறைமை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படியே எதிர்வரும் காலங்களில் சுவிட்சர்லாந்தின் விமான நிலையங்களில் கடவுச்சீட்டு மற்றும் பயண டிக்கெட் என்பனவற்றை காண்பிக்காது விமானத்தில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக விமான பயணங்களின் போது  Check in மற்றும் bording செய்யும் போது பேசியல் ஸ்கேனர்ஸ் மூலம் முக அங்கீகாரம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பயோமெட்ரிக் முறைமையில் இலகுவாக பயணிகள் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த முக அங்கீகார முறைமை பயணிகளின் தனியுரிமையை பாதிப்பதாக சில தரப்பினர் விமர்சனங்களை செய்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சேவையை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button