Swiss News In Tamil

தமிழீழத் தேசிய கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா

தமிழீழ தேசிய கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் 76 வது அகவை தினத்தை முன்னிட்டு பவளவிழா சிறப்பு நூல் வெளியீடு ஒன்று சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருக்கிறது.

குறித்த வெளியீட்டு விழா மார்கழி மாதம் 1ம் திகதி அதாவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சூரிச் மாகாணத்தில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

காலை 11 மணி முதல் மாலை 7 மணிவரை இடம்பெறவிருக்கும் குறித்த நிகழ்வில் கலைநிகழ்வுகள் இடம்பெறுவதோடு ஈழத்துக்கலைஞர்களின் படைப்பில் பிரான்ஸ் கலை பண்பாட்டுக்கழகத்தின் வெளியீடான ‘புதுவையின் புதுமை’ என்ற இசைப்பேழையும் வெளியீடு செய்யப்படவுள்ளது.

WhatsApp Image 2024 11 28 at 18.47.11 46f4d8c3

மேலும் நிதர்சனம் தயாரிப்பில் உருவான ‘புரட்சிப்பாமுதல்வன்’ ஒளி ஆவணமும் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள கலைஆர்வலர்கள் அனைவரையும் அன்போடும் உரிமையோடும் அழைத்து நிற்கிறார்கள் ஏற்பாட்டு குழுவினர்.

Related Articles

Back to top button