பாசல் பகுதியில் ட்ராம விபத்து : பல மீற்றர்கள் தூக்கி வீசப்பட்ட முதியவர். பாசல் (Muttenz) முன்டென் பகுதியில் 82 வயதான ஒருவர் டிராம் மோதி பல மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளார். வியாழன் காலை, 11 மணிக்குப் பிறகு, பாதசாரி கடவையை கடந்த 82 வயதான ஒருவர் மீதே ட்ராம் மோதியுள்ளது. பாசல் காவல்துறை அறிவித்தபடி, பாதசாரி பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பொலிஸாரின் கூற்றுப்படி 'பாதசாரி டிராமை கவனிக்கவில்லை. இருப்பினும் ட்ராம் ட்ரைவர் உடனடியாக அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தினாலும் சரியான நேரத்தில் நிறுத்த முடியவில்லை. மேலும் பக்கத்திலும் முன்பக்கத்திலும் இருந்து தாக்கப்பட்டு பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார் என தெரிவித்தனர்.