Swiss News In Tamil

சூரிச்சில் பயங்கர ட்ராம் விபத்து : ஒருவர் சம்பவ இடத்திலையே பலி

சூரிச்சில் பயங்கர ட்ராம் விபத்து : ஒருவர் சம்பவ இடத்திலையே பலி

சூரிச்சில் பயங்கர ட்ராம் விபத்து : ஒருவர் சம்பவ இடத்திலையே பலி புதன்கிழமை அதிகாலை சூரிச்சில் உள்ள பெல்லூவில் (bellevue) விபத்து ஏற்பட்டது. ஒரு பாதசாரி டிராம் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.

காலை 7 மணிக்குப் பிறகு மோதல் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. (Quaibrücke) குவாய் பாலத்தில் விபத்துக்குள்ளானதாக ஊடக அறிக்கை கூறுகிறது.

நகர காவல்துறையின் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகளின் படி, லைன் 9 இல் ஒரு கோப்ரா டிராம் பெல்லூவிலிருந்து Bürkliplatz (பர்க்லிப்ளாட்ஸ்) நோக்கிச் சென்றது.  அப்போது அங்கே பாதசாரி கடக்கும் பகுதியில் ஒரு பாதசாரியுடன் விபத்து ஏற்பட்டது.

சூரிச்சில் செய்திகள் Nau ch 10 09 2024 09 30 AM செய்திகள் Nau ch 10 09 2024 09 29 AM

உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த நபர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவரை அடையாளம் காணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. விபத்துக்கான சரியான காரணம் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது.

கடுமையான விபத்து காரணமாக, அப்பகுதியில் சாலை மூடப்பட்டது. மற்றும் நகர ட்ராம் சேவைகள் சிலவும் இடைநிறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Pic (c) NicoLeuthold, Nau

Related Articles

Back to top button