Swiss News In Tamil

லுகானோவில் இடம்பெற்ற சுவிசின் சிறந்த சீஸ்களுக்கான போட்டி

லுகானோவில் இடம்பெற்ற சுவிசின் சிறந்த சீஸ்களுக்கான போட்டி

லுகானோவில் இடம்பெற்ற சுவிசின் சிறந்த சீஸ்களுக்கான போட்டி சுவிட்சர்லாந்தில் சிறந்த சீஸ்களை தெரிவுசெய்வதற்காக போட்டி ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளியன்று லுகானோவில் இடம்பெற்ற குறித்த 13வது சுவிஸ் சீஸ் விருதுகளில், பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தின் இரண்டு சீஸ்களும்இ ஜெர்மன் மொழி பேசும் பகுதியிலிருந்து ஒன்றும் நாட்டிலேயே சிறந்தவை எனப் பெயரிடப்பட்டுள்ளன.

வெற்றி பெற்ற சீஸ்கள் வாட் மாகாணத்திலிருந்தும் இரண்டுவகை சீஸ்களும் ப்ரீபூர்க் மாகாணத்தில் இருந்து ஒரு சீஸ் வகையும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

லுகானோவில்

லுகானோவில் உள்ள 150 நிபுணர்களைக் கொண்ட நடுவர் குழுவால் 1,100 க்கும் மேற்பட்ட சீஸ்களில் இருந்து அவை தேர்ந்தெடுக்கப்பட்டன.

அதில் முதலிடத்தில் தெரிவுசெய்யப்பட்ட 3 சீஸ்களும் சிறந்த சீஸ்ககளாக விருது பெற்றுள்ளன. அடுத்த சுவிஸ் சீஸ் விருது 2026 இல் ஃப்ரிபர்க்கில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. (c) SDA

Related Articles

Back to top button