Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் திடீரென ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

சுவிட்சர்லாந்தில் திடீரென ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

சுவிட்சர்லாந்தில் திடீரென ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் சுவிஸ் ராணுவ வீரர்கள் பலருக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் 30 ராணுவ வீரர், வீராங்கனைகளுக்கும், Ticino மாகாணத்தில் 42 ராணுவ வீரர் வீராங்கனைகளுக்கும் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

ராணுவ வீரர்களுக்கு

மருத்துவப் பரிசோதனையில் அவர்களுக்கு நோராவைரஸ் என்னும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த வைரஸுக்கு தடுப்பூசி கிடையாது. அத்துடன் அது எளிதில் பரவக்கூடியதும் ஆகும். ஆகவேதான், கூட்டமாக பலர் சேர்ந்து வாழும் இடங்களில் அது எளிதில் பரவிவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button